search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி உருளைகள்"

    இங்கிலாந்தின் நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்கள், தானாக பனி உருளைகளாக மாறி உருண்டு வந்த காட்சி காண்போரை வியக்க வைத்துள்ளது. #Raresnowrollers
    மால்பாரோ:

    இங்கிலாந்தில் உள்ள மால்போரோ பகுதியில் பனித்துகள்கள் நிலப்பரப்பின் மீது படிந்து, காண்பதற்கு வெள்ளை கம்பளம் போல் காட்சி அளிக்கின்றது.

    மால்போரோ பகுதியில் இருக்கும் காடுகளில் பணி புரிபவர்  பிரையன் பேய்ஸ் (51), வழக்கம்போல் பணிக்காக அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பனி உருளைகள் உருண்டு கொண்டு வந்துள்ளது. இதனை கண்ட பேய்ஸ் உடனடியாக புகைப்படம் எடுத்தார். இது வண்டி சக்கரத்தினைப்  போன்று, நிலப்பரப்பில் படிந்திருந்த பனிதுகள்களினால் உருவாகியுள்ளது.

    அப்பகுதியில் யாரோ இதனை செய்திருக்கலாம் என முதலில் எண்ணியுள்ளார். ஆனால் அருகில் சென்று பார்த்தபோது எவ்வித கால் தடங்களும் இல்லாததையடுத்து இயற்கையாக உருவானதை உணர்ந்தார். நிலப்பரப்பில் இருந்த பனிதுகள்களின் மீது காற்று வேகமாக வீசியதால், படர்ந்திருந்த பனிதுகள்கள் ஒருங்கிணைந்து உருளைகளாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுவரை இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை எனவும், இந்த உருளைகளின் நடுவே பார்த்தபோது சூரியனின் ஒளி அற்புதமாக பிரதிபலித்ததாகவும்  பேய்ஸ் தன் அனுபவத்தினை உற்சாகத்துடன் தெரிவித்தார். மேலும் இந்த உருளைகள் குறிப்பிட்ட தொலைவை கடந்து தானாக உடைந்து மீண்டும் நிலப்பரப்பில் பனிதுகள்களாக கலந்ததாகவும் அவர் கூறினார்.  #Raresnowrollers
    ×